Entertainment
சமந்தாவை அடுத்து டாக்டராகும் நயன்தாரா?
திரைப்படங்களில் நாயகிகள் டாக்டராக நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ஹிட்டாகும் என்பது கோலிவுட் திரையுலகினர்களின் நம்பிக்கை. சமீபத்தில் சமந்தா டாக்டர் வேடத்தில் நடித்திருந்த ‘தெறி’ மற்றும் ‘இரும்புத்திரை’ இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். அந்த வகையில் நடிகை நயன்தாரா தற்போது ஒரு படத்தில் டாக்டராக நடித்து வருகிறார். அந்த படம் தல அஜித்தின் ‘விசுவாசம்’ என்பது குறிப்பிடத்தக்க்கது.
ஆம், நேற்று முன் தினம் முதல் ‘விசுவாசம்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் இன்றுமுதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். படக்குழுவினர்களிடம் இருந்து வெளிவந்த ரகசிய தகவல்களில் இருந்து அவர் டாக்டராக நடிப்பதாக தெரிகிறது.
நயன்தாரா ஏற்கனவே சூர்யாவின் ‘மாஸ்’ படத்தில் நர்ஸாக நடித்துள்ளார். சாதாரண வேலைக்காரி கேரக்டர் முதல் கலெக்டர் வரை அனைத்து கேரக்டர்களிலும் நடித்துள்ள நயன்தாரா தற்போது டாக்டர் கேரக்டரிலும் நடித்து வருகிறார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித், நயன்தாரா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், விவேக், கோவை சரளா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டின் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது
