நயன்தாராவின் நெற்றிக்கண்: ஓடிடியில் ரிலீஸ் என தகவல்

4714f82ab235dfb80d7c26dd50f85e89

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இதற்கிடையே கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தற்போது திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரையரங்குகள் திறக்கும் வரை காத்திருக்க படக்குழு முடிவு செய்தது. ஆனால் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டதால் தற்போது இந்தத் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதை அடுத்து இந்த நிறுவனத்தின் சார்பில் பிரபல ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 

‘அவள்’ உள்பட  ஒரு சில திரைப்படங்களை இயக்கிய மிலிந்த் ராவ் என்பவர் இயக்கிய இந்த திரைப்படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் அவரது நடிப்புக்கு சவால் விடும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் நயன்தாரா ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.