
பொழுதுபோக்கு
இணையத்தில் லீக்கானது நயன்தாராவின் திருமண பத்திரிக்கை!!
கோலிவுட் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருபவர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன். இந்நிலையில் நானும் ரெளவுடிதான் படத்தின் மூலம் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளாக காதல் பறவையாக டூயட் பாடும் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு அடுத்தமாதம் திருமணம் நடைபெற உள்ளது. குறிப்பாக இவர்களது திருமணத்திற்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள் வருவார்கள் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவில்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்ட இந்த ஜோடி அண்மையில் விக்னேஷ் சிவன் குலதெய்வத்திற்கு நயன்தாரா பொங்கல் வைத்தது இணையத்தில் வைரலானது.
இந்த சூழலில் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு அடுத்த மாதம் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெறும் நிலையில் இவர்களது திருமண பத்திரிக்கை சோசியல் மீடியாவில் கசிந்து வைரலாக பரவி வருகிறது.
இதனைப் பார்த்த அவர்களது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
