
பொழுதுபோக்கு
நயன்தாரா- விக்னேஷ் திருமணத்திற்கு யாரு தாலி எடுத்துக் கொடுத்தா தெரியுமா? இந்த முன்னணி ஹீரோவா!
காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு ஜீன் 9ல் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது
இவர்களது திருமணத்தை ஒரு ஆவணப்படமாக கௌதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.திருமணம் முடிந்து வருகிற 11-ஆம் தேதி நாளை இருவரும் இணைந்து அனைவரையும் சந்திக்கிறோம் என செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
நயன் விக்கி திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் முழுக்க முழுக்க கண்ணாடியினால் ஆன செட் அமைக்கப்பட்டது .மேலும் திருமணத்தை மும்பை சார்ந்த இவண்ட் மேனேஜ்மேண்ட் அமைப்பிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது.
இந்த திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் பெற்றிருந்ததால், நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. யாரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை.
திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ரஜினி, சூர்யா, கார்த்தி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான்,அஜித் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் 300 பேர் மட்டுமே பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சினிமா சார்ந்த முக்கிய நட்ஷத்திரங்கள் திருமணத்திற்கு வருவதால் அவர்களின் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்தபட்டது, குறிப்பாக இந்த திருமணத்தில் 90க்கு மேற்பட்ட பவுன்சர்கள் குவித்து பாதுகாப்பு பலமாக்கப்பட்டதாம். இவர்கள் அனைவரும் மும்பையில் இருந்து பிரத்தியேகமாக வரவைக்கப்பட்டனர்.
ஜெயம் ரவி,பிரியா பவானி நடித்த அகிலன் டீசர் இதோ!
