Connect with us

சமந்தா இல்லாமல் நயன்தாரா திருமணம்! காரணம் அதாக இருக்குமோ?

vignesh shivan 1

பொழுதுபோக்கு

சமந்தா இல்லாமல் நயன்தாரா திருமணம்! காரணம் அதாக இருக்குமோ?

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தவிர்க்க முடியாத நடிகையாகவும் கனவு கன்னியாகவும் வலம் வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக காதல் பறவையாக டூயட் பாடும் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது.இவர்களது திருமணத்திற்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள் வருவார்கள் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்தது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.இவர்களது திருமணத்தை ஒரு ஆவணப்படமாக கௌதம் வாசுதேவ் மேனன் எடுக்க உள்ளார்களாம்.

Samantha Ruth Prabhu 1

சுமார் 200 முக்கிய பிரபலங்களுக்கு நட்சத்திர ஜோடிகள் அழைப்பு விடுத்துள்ளார்கள் விக்கி நயன் ஜோடி. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் காத்துவாக்குல 2 காதல்.இந்த படம் மிகவும் பழைய கான்செப்ட் என்று பலரும் கழுவி ஊற்றினாலும் நல்ல வசூல் சாதனை படைத்தது.இந்த படத்தின் மூலம் சமந்தா மற்றும் நயன்தாராவிற்கு இடையில் நட்பு அதிகரித்துள்ளது.இருவரும் இணைந்து படம் பார்ப்பது,நைட் பார்டிகளுக்கு செல்வது என தன் நடிப்பை வலுப்படுத்திக்கொண்டனர்.

மேலும் நயன்தாரா- விக்னேஷ் ஜோடியும் தனது திருமணத்திற்கான முதல் அழைப்பை சமந்தாவிற்கு கொடுத்ததாகவும் தகவல் பரவியது.இது எல்லாம் ஒருபுறம் இருக்க இன்று நடக்கும் திருமணத்தில் சமந்தா கலந்து கொள்ளவில்லை என்கிற தகவல் கிடைத்துள்ளது.

kussi

எஸ்கே.20 படம்! வெளியான வேற லெவல் அப்டேட்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top