Connect with us

நயன்தாராவா? சமந்தாவா? அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்! நாளைய தினம் வெளியீடு;

kaadhdhuvagula 2 kadhal

செய்திகள்

நயன்தாராவா? சமந்தாவா? அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்! நாளைய தினம் வெளியீடு;

தனது நடிப்பாலும் தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் இன்று மக்கள் செல்வன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் துணைக் கதாபாத்திரம், சிறப்பு வேடம் உள்ளிட்ட சில காட்சிகளில் மட்டுமே நடித்து வந்தார்.

ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட விஜய் சேதுபதி வருடத்திற்கு ஆறு முதல் எட்டு படங்களை வெளியிடும் அளவிற்கு ஏராளமான இவரது திரைப்படங்கள் திரைக்குவந்து கொண்டே உள்ளன.

அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படம் நாளைய தினம் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக  நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் கலாட்டா இந்த படத்தினை பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி யாரை திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வியோடு ரசிகர்கள் நாளை தினத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top