
பொழுதுபோக்கு
யம்மாடியோவ்..! நயன் – விக்கியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமணத்திற்கு ரஜினி, கார்த்திக், மணிரத்தினம், டி.டி என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படத்தை இயக்குனரான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
இந்த சூழலில் திருமணத்திற்கு அடுத்த நாள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்யும்போது ஒரு சர்ச்சையில் சிக்கினார்கள். அதற்கு மன்னிப்பும் கேட்டு விட்டார்கள். அதேபோல் நேற்றைய முன்தினம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர்.
இந்திய விமானப்படையில் பணியாற்றிய பெண்மணிக்கு மகளாக பிறந்து தற்போது தென் இந்திய சினிமாவையே கலக்கி வருபவர் நயன்தாரா. குறைந்தபட்சமாக ஒவ்வொரு படத்திற்கும் 3 முதல் 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்குவதாக தெரிகிறது.
இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு ரூபாய் 70 முதல் 80 கோடி வரையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொத்துமதிப்பு 50 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
