Entertainment
பிப்ரவரியில் கெட்டிமேளம் டும் டும் டும்…. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்?
அந்த நிறுவனத்திற்காக நயன்தாரா கதையை தேர்வு செய்யும் விதம் அருமை என்று விக்னேஷ் சிவன் அண்மையில் பாராட்டியிருந்தார். விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்.
அவர் அப்படி போஸ்ட் போடும் போது எல்லாம், தலைவியை எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் அன்பான இயக்குநரே என்று தான் நயன்தாராவின் ரசிகர்கள் கேட்பார்கள். எங்கள் திருமணத்தில் எங்களை விட மற்றவர்களுக்கு தான் அதிக அக்கறை. காதல் போர் அடிக்கும்போது திருமணம் செய்து கொள்வோம் என்றார் விக்னேஷ் சிவன்.
தலைவியை காதலிப்பது போரே அடிக்காது, அதற்காக கடைசி வரை திருமணமே செய்து கொள்ள மாட்டீர்களா விக்னேஷ் சிவன் என்று ரசிகர்கள் கேட்டார்கள். இந்நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் திருமணம் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது.
