தமிழ் சினிமாவில் கடந்த 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த மாதம் ஜூன் 9-தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது.
குறிப்பாக திருமணமாகி 4 மாதங்கள் ஆனதால் விதிமீறல்களை மீறி குழந்தை பெற்றெடுத்தாக கூறப்பட்டது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் தவறு செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
தற்போது இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கடந்த 2016-ம் ஆண்டே விக்கி- நயன் தம்பதி பதிவு திருமணம் செய்துகொண்டது உறுதியாகியுள்ளது.
அதே சமயம் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை விவரங்கள், வாடகைத்தாயின் உடல்நிலை குறித்த ஆவணங்களை மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.