
பொழுதுபோக்கு
சர்ச்சையில் நயன் – விக்கி திருமணம்! வழக்குப்பதிவு வரை போயிடுச்சா?
காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு ஜீன் 9ல் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தை ஒரு ஆவணப்படமாக கௌதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.
திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் முழுக்க முழுக்க கண்ணாடியினால் ஆன செட் அமைக்கப்பட்டது .மேலும் திருமணத்தை மும்பை சார்ந்த இவண்ட் மேனேஜ்மேண்ட் அமைப்பிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது.
இந்த திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் பெற்றிருந்ததால், நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ரஜினி, சூர்யா, கார்த்தி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான்,அஜித் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் 300 பேர் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதால் அவர்களின் பாதுகாப்பிற்காக 90க்கு மேற்பட்ட பவுன்சர்கள் குவித்து பாதுகாப்பு பலமாக்கப்பட்டதாம்.
இந்நிலையில், நயன்தாரா திருமணம் நடபெற்றபோது, மகாபலிபுரத்தில் கடும் போலீஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.பொதுமக்கள் கடற்கரைக்கே செல்லாத முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன. அப்படி பாதுகாப்பாக முடிந்த திருமணம் தற்போது வழக்குப்பதிவிற்கு வந்துள்ளது.
கடற்கரை என்பது பொதுவான இடம் மேலும் இவர்களின் திருமணத்தின் காரணமாக அங்கு ஏன் பொதுமக்களை அனுமதிக்கவில்லை என சமூக ஆர்வலரான சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
பழைய அஜித் எங்க! வியப்பில் ரசிகர்கள்.. ஏ கே 61 படத்தில் மாஸ் அப்டேட்!
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விக்னேஷ் சிவன் நயன்தாரா தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.அதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.
