காதல் பறவையாக டூயட் பாடிய முன்னணி நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.
ஹனிமூனில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் ரசிகர்களிடம் பொறாமையை ஏற்படுத்தினார். அதன்பின், ஹனிமூன் முடித்து ஜ்வான் படப்பிடிப்புக்கு நயன் தாரா சென்றார், செஸ் ஒலிம்பியாக் நிகழ்ச்சியை இயக்க விக்னேஷ் சிவனும் பிஸியானர்.
சமீபத்தில் சென்னை வந்த நயன் விக்னேஷ் சிவன் செய்த உணவை சாப்பிட்டு மயக்கம், வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஸ்பெயினுக்கு தனி விமானத்தில் கணவர் மடிமீது உட்கார்ந்தும் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இரண்டாவது ஹனிமூன் சென்றார் விக்னேஷ் சிவன். தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.
அங்குள்ள கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்துள்ளார் நயன் தாரா.மேலும் மனைவியின் கையைபிடித்தபடியும், இன்னொரு புகைப்படத்தில் நயன் கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
‘தளபதி 67’ படத்தை குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு !
திருமண மகிழ்ச்சியை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தொழில் ரீதியாகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.