Connect with us

கத்ரீனா கைஃப் மற்றும் விராட் கோலியுடன் போட்டி போடும் நயன்! இதுக்கு கூடவா போட்டி?

pjimage 7 7

பொழுதுபோக்கு

கத்ரீனா கைஃப் மற்றும் விராட் கோலியுடன் போட்டி போடும் நயன்! இதுக்கு கூடவா போட்டி?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இந்தப் படம் 2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த 7 ஆண்டுகளாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக காதல் பறவையாக டூயட் பாடும் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு அடுத்தமாதம் திருமணம் நடைபெற உள்ளது. குறிப்பாக இவர்களது திருமணத்திற்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள் வருவார்கள் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

maxresdefault 31

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவில்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்ட இந்த ஜோடி அண்மையில் விக்னேஷ் சிவன் குலதெய்வத்திற்கு நயன்தாரா பொங்கல் வைத்தது இணையத்தில் வைரலானது.

இதை தொடர்ந்து இவர்களது திருமணமும் திருப்பதியில் ஜூன் 9-ல் தான் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. அதனால் தற்போழுது சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அதே ஜூன் 9-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது

அதாவது இவர்களது திருமணத்தை ஒரு ஆவணப்படமாக கௌதம் வாசுதேவ் மேனன் எடுக்கவிருக்கிறார் எனவும் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.

katrina vicky

அதை தொடர்ந்து மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது,திருமணத்தில் அதிக ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இருக்கும் நயன் விக்கி ஜோடி தற்போழுது திருமண பத்திரிக்கையை விநியோகித்து வருகின்றனர்.தனது திருமணத்தை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் உள்ளார்.நேற்று வருகிற 11-ஆம் தேதி இருவரும் இணைந்து அனைவரையும் சந்திக்கிறோம் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

virat anushka wedding 759

அந்த வகையில் நயன் விக்கி திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் முழுக்க முழுக்க கண்ணாடியினால் ஆன செட் அமைக்கப்பட்டுள்ளதாம்.மேலும் கத்ரீனா கைஃப் மற்றும் விராட் கோலி திருமணத்தை நடத்திய இவண்ட் மேனேஜ்மேண்ட் அமைப்பிடம் இந்த திருமணத்தை நடத்த பேச்சுவார்த்தை நடத்து முடிந்ததாம்.

லோகேஷ் கனகராஜ்க்கு கிடைத்த பரிசு! கொடுத்தது யாரு தெரியுமா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top