
பொழுதுபோக்கு
காதலனுடன் திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த நயன் !!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவரின் அசத்தலான நடிப்பால் விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து லேடீஸ் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. இதனிடையே தற்போது இருவரும் ஒன்றாக வெளிநாடுகள் மற்றும் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படம் தமிழகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சூழலில் நடிகை நயந்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதிக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
இதனிடையே அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படத்துடன் ’காத்து வாக்குல இரண்டு காதல்’ இன்றிலிருந்து உங்களுடையது என விக்னேஷ் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
