Connect with us

விக்னேஷ் சிவனை விட்டு விட்டு ஷூட்டிங்கிற்கு செல்லும் நயன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

nayanthara vignesh shivan wedd 1200x768 tile 1654671135

பொழுதுபோக்கு

விக்னேஷ் சிவனை விட்டு விட்டு ஷூட்டிங்கிற்கு செல்லும் நயன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு ஜீன் 9ல் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு அடுத்த நாள் இருவரும் திருப்பதி சாமி தரிசனம் செய்து செருப்பு காலுடன் பிரகாரத்தை சுற்றியதாக ஒரு சர்ச்சையில் சிக்கினார்கள், அதற்கு விக்னேஷ் சிவன் தரப்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது.

Nayanthara-vignesh-wedding

நயன்தாராவின் திருமணத்திற்கு பெற்றோர்கள் கலந்து கொள்ளாததால் கொச்சினுக்கு மறு வீட்டிற்கு சென்றனர். அங்கு பெற்றோர்களிடம் ஆசி பெற்று இன்னும், சில நாட்கள் நயன்தாராவின் பெற்றோருடன் கொச்சியில் தங்க போகிறார்கள் என தகவல் கிடைத்தது.

அடுத்ததாக கொச்சியில் உள்ள திருவுல்லாவில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

nayan 11

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி அவசரமாக இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியது . அட்லீ இயக்கத்தில் நடிகை நயன்தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின்இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா அடுத்த வாரம் கலந்து கொள்ள இருப்பதாக கூறியிருந்தார். இதில் கலந்து கொள்வதற்காக கேரளாவில் இருந்து நயன்தாரா நாளை மறுதினம் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வந்துள்ளது.

காபியில் குளிக்கும் பிகில் நாயகி! ரசிகர்களிடம் சவால் விடும் போட்டி!

திருமணத்திற்கு பின் நயன்தாரா மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top