இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: நாகை மீனவர்கள் 11 பேர் கைது..!!!

தமிழகத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி, படகுகளை சூறையாடுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

அந்த வகையில் 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரந்தூரில் விமான நிலையம்: நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை!!

நாகையில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீன்பிடிப்பதற்காக சுமார் 40-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு சென்றனர். இவர்கள் காலை 12 மணியளவில் இலங்கை கடற்கரைக்கு மீன்பிடிக்க வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் ரோந்துக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்தாக கூறி 11 பேரை கைது செய்தனர். இவர்கள் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

50 பைசாவிற்கு பால் பாக்கெட்: அலைமோதிய கூட்டத்தினால் பரபரப்பு..!!

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. அந்தமான் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடப்பட்ட சூழலில் இத்தகைய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.