ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதற்கு பல உலக நாடுகள் கண்டங்கள் தெரித்தனர். இந்த போரினை நிறுத்த 4- கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் உக்ரைனில் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் மருத்துவம் படித்து வரும் நவீன் சேகரப்பா என்பவர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி தின்பண்டங்கள் வாங்க சென்ற போது ரஷ்ய குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் இரங்கல் தெரிவித்தனர். இதனிடையே இவரது உடல் தாயகம் கொண்டுவரக்கோரி நவீன் சேகரப்பாவின் பெற்றோர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனால் உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டார். அந்த வகையில் நாளை மறுநாள் நவீனின் உடல் அவரது வீட்டிற்கு வந்து சேரும் என கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.