வசுமத், கௌரி, லட்சுமி போன்ற யோகங்களின் தன்மை…..

62c9378810f6676c94b8ecfc3021ae1c

மந்த்ரேஸ்வரர் எழுதிய பலதீபிகை நூலில் சொல்லப்பட்டுள்ள யோகங்கள் பற்றி தான் நாம் சில நாட்களாகவே பார்த்து கொண்டு வருகிறோம். நாம் பலரும் நினைத்திருப்போம்  அமிர்த யோகம், சித்த யோகம் போன்ற யோகங்கள் தான் இருக்கிறது.

வேறு எந்த யோகமும் இல்லை என்று. ஆனால் உண்மையில் இந்த யோகங்கள் மட்டும் அல்லாது வேறு சில யோகங்களும் உள்ளன என்பதை மந்த்ரேஸ்வரர் எழுதிய நூலில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

இன்று நாம் பார்க்க உள்ள யோகம் வசுமத், கௌரி, லட்சுமி யோகங்கள் தான்.

ஒருவது ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனின் 3, 6, 10, 11 போன்ற இடங்களில் குரு, சுக்கிரன், புதன் இருந்தால் அவர் வசுமத் யோகத்தை பெறுவார். இந்த யோகம் அவரை பெரும் செல்வந்தராக மாற்றும்.

லட்சுமி யோகம் ஒருவருக்கு எப்படி கிடைக்கும் என்றால் ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதுக்குரிய சுக்கிரன் சொந்தவீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ 1, 4, 5, 9, 10 இந்த ஏதாவதொரு வீட்டில் இருந்தால் இந்த யோகம் அவருக்கு கிடைக்கும். இந்த யோகம் ஒருவருக்கு பதவி, செல்வம் போன்றவற்றை தரும்.

இதேபோலத்தான் சந்திரன் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருந்து அதனை குரு பார்த்துக் கொண்டிருந்தால் அது கௌரி யோகம். இந்த யோகம் உள்ளவர் அழகு, நட்பு, அனைவராலும் விரும்பப் படுபவர் போன்றவற்றில் சிறந்தவராக இருப்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.