‘அன்று ஆறு, இன்றோ கழிவுநீர் கால்வாய்’….! வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் இயற்கை வளங்களை சேதப்படுத்த கூடாது!!
தமிழகத்தில் அதிகளவு வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது.அதே வேளையில் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் இயற்கை வளங்கள் அதிகளவில் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து உயர்நீதிமன்றம் கருத்தினை கூறுகிறது.
அதன்படி வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் இயற்கை வளங்களை எந்த காரணத்திற்காகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
இயற்கை வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு தேவைப்படும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார். சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் கருத்துக் கூறினார்.
சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம பொருட்கள் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வாகனங்களை முடக்கம் செய்யும் நடவடிக்கைகளை 6 மாதத்துக்குள் முடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
