புதிய கொரோனாவை தடுக்கும் இயற்கை மருந்து! வீட்டிலே செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க…

புதிய கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள் பானத்தை பருகுமாறு இயற்கை மருந்துவ துறை வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மீண்டும் புதிய வகை கொரோனா பரவும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் அரசு துடங்கியுள்ளது. தொற்று ஏற்பட்ட பிறகு சிகிச்சை என்பது ஒரு புறம் இருக்க வரும் முன் தடுப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் எந்த வைரஸும் விரைவாக தொற்றிக்கொள்ளும் என்பதால் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான இயற்கை பானங்களை தமிழக அரசின் யோகா இயற்க்கை மருத்துவ துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த முறை கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்த போது இந்த பானங்கள் அதிக அளவு தயாரித்து வழங்கப்பட்டன.பச்சை தண்ணீர் போல ஒரு பானம் சூடான பானம் என இரண்டு முறையாக வழங்கப்பட்டன.

இந்த மூலிகை கசாயங்களை வீட்டிலே தயார் செய்து குடித்து வரலாம். அதில் சேர்க்க வேண்டிய பொருட்கள்

நாட்டு நெல்லி – 50 மி.லி

துளசி – 20 இலைகள்

இஞ்சி – 10 மி.லி அல்லது சுக்கு

எலுமிச்சை – 5 மி.லி

மஞ்சள் தூள் – சிறிதளவு

இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டிய நீரை 50 மி.லி பெரியவர்களும் 20 மி.லி சிறியவர்களுக்கு குடித்து வரலாம்.

சூடான பாணம் குடிக்க விரும்பினால் அரசு மருத்துவ மனைகளில் ஒரு நபருக்கு தலா 100 கிராம் பொடி வழங்கப்படுகிறது. இதை ஒரு தேக்கரண்டி பொடி எடுத்து தாண்ணீரில் கலக்கி கொதிக்க வைத்து குடித்து வரலாம்.

இதை பெரியவர்கள் 100 மி.லியும் குழந்தைகள் 50 மி.லி குடிக்கலாம், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 10 மி.லி குடித்து வரலாம். இந்த மருந்தை தினமும் குடித்து வருவதால் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நீரிழிவு , இரத்த சர்க்கரை அளவை குறைக்கணுமா? ராகி இட்லி சாப்பிடலாம் வாங்க…

இந்த இரண்டு பானங்களுக்கான செய்பொருட்கள் அனைத்தையும் மதுரை அரசு மருத்துவமனையில் பொட்டலம் வழங்க அரசு வழி செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.