நான் மகளிர் ஆணைய உறுப்பினராக வந்திருக்கேன்..இங்க அரசியல் பேச விரும்பல..!! கள்ளக்குறிச்சியில் விசாரணைக் களத்தில் குஷ்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பு உள்ளிட்ட குழு இன்று கள்ளக்குறிச்சி கருணாபுரம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை ஆரம்பித்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18, 19ம் தேதி விஷச் சாராயம் குடித்தாக பலர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முதல் உயிரிழப்பு ஏற்பட அரசின் கவனத்திற்குச் சென்றது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பலி எண்ணிகை அதிகமாக இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளானது. இன்றுவரை இந்தச் சம்பவத்திற்கு 62 பேர் பலியாகி உள்ளனர். இதில் 5 பெண்கள் அடங்குவர்.

மேலும் இன்று சிகிச்சை முடிந்து சுமார் 20-க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பினர். பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேர் ஜிப்மர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் பலர் உள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரை தமிழக அரசியல் கட்சித் தலைவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு 10 லட்சம் நிவாரணம் நிதி அளித்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருவோருக்கு 50 ஆயிரம் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு ஆளான சபாநாயகர் ஓம் பிர்லா

சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் சட்டசபையில் இந்தப் பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் வெளிநடப்பு செய்கின்றனர். மேலும் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பூ கள்ளக்குறிச்சி காவல் நிலையம் வந்தார். அங்கு காவல் அதிகாரியிடம் விசாரணை குறித்து கேட்டார். மேலும் சிபிசிஐடி குறித்த தகவல்களையும் கேட்டறிந்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகள், கைது செய்யப்பட்டோர் ஆகியவை குறித்த விபரங்களைச் சேகரித்திருக்கிறோம். மேலும் வழக்கு தொடர்பாக அடுத்தகட்டமாக பாதிக்கப்பட்டோரைச் சந்திக்க உள்ளோம்.

காவல் துறையினர் போதுமான தகவல்களைத் தந்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களின் இதற்கு முந்தைய குற்றப் பின்னணி குறித்த தகவல்களையும் பெற்றுள்ளோம். அரசு தரப்பில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. மகளிர் ஆணையக் குழு உறுப்பினராக மட்டுமே வந்துள்ளேன். எந்த வகையிலும் அரசியல் ரீதியாக நான் பேச விரும்பவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews