தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்: 20 கோடி இழப்பீடு… நீதிபதிகள் புதிய உத்தரவு!!

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தலில் போலி நில ஆவணங்களை காட்டி சுமார் 20 கோடியே 52 லட்சம் ரூபாரை மீண்டும் திரும்ப வசூலிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் திட்டம் நடைப்பெற்றது. அப்போது போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 20 கோடியே 52 லட்சம் இழப்பீடு வழங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இபிஎஸ் வழக்கு! அறப்போர் இயக்கம் அவதூறு பேச கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி!!

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நில உரிமையாளர்கள் குறித்து விவரம் மற்றும் போலி ஆவணங்கள் குறித்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வு இன்று நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

அதில் தவறாக இழப்பீடு வழங்கப்பட்ட 20 கோடியே 52 லட்சம் வசூலிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதிகள் தமிழக அரசின் இழப்பீடு ஏன் தவறாக வழங்கப்பட்டது? இது குறித்து அதிகாரிகல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விவை முன்வைத்தார்.

மாணவர்களே அலர்ட்!! TANCET தேர்வு ஒத்திவைப்பு… எப்போது தெரியுமா?

பின்னர் முறைகேடு குறித்து முழுமையாக விசாரணை அடுத்த முறை தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள் விசாரணையை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.