Connect with us

நேஷன்ல் ஹொரால்டு விவகாரம்: ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு!!!

202202081850061262 Tamil News Tamil News Ahmedabad serial blasts case Gujarat court SECVPF

தமிழகம்

நேஷன்ல் ஹொரால்டு விவகாரம்: ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு!!!

சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்ற நிலையில் இன்று கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 1,000 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக நேஷன்ல் ஹொரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கதுறையிர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நேஷன்ல் ஹொரால்டு பத்திரிக்கை விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினத்தில் சோனியா காந்தியை அமலாக்கத்துறையில் ஆஜாரான நிலையில் அவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து காங்கிரஸ் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 1,000 பேர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top