மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் இன்று காலை மாரடைப்பால் காலமான எடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
.
மலையாள திரையுலகில் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஒளிப்பதிவாளர் சிவன். இவர் தமிழ் தெலுங்கு உள்பட பல மொழிகளில் தற்போது ஒளிப்பதிவாளராக இருக்கும் சந்தோஷ்சிவன் அவர்களின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளர் சிவன் அவர்கள் மலையாள திரையுலகில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்ததற்காக 3 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் சிவன் அவர்கள் இன்று திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து உடனடியாக அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மறைந்த சிவன் அவர்களுக்கு வயது 89.
இது குறித்த செய்தி அறிந்ததும் தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் ஒளிப்பதிவாளர் சிவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், சந்தோஷ்சிவன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர். ஒளிப்பதிவாளர் சிவன் அவர்களின் மறைவு ஒளிப்பதிவு துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறைந்த ஒளிப்பதிவாளர் சிவன் அவர்களின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.