விஜய்சேதுபதியை தொடர்ந்து கோல்டன் விசா பெற்ற பிரபல நடிகர்… அமீரகம் அளித்த கவுரவம்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாசருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய ஆளுமை நடிகராக கருத்தக்கூடியவர்களில் ஒருவர் நடிகர் நாசர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது, இவ்விசா சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி உள்ளிட்ட வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய அமீரகம் நடிகர் நாசருக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது. தென்னிந்திய மொழியில் முன்னணி நடிகராக வலம் வரும் நாசருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சோசியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் நாசர் அவர்களுக்கு இவ்விசா கிடைக்க ஏற்பாடு செய்த துபை வாழ் இந்திய தொழில் அதிபர் திரு.வசிம் அதானுடன் நடிகர் நாசர் கோல்டன் விசா பெறும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
கோல்டன் விசா அளித்ததற்காக அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடுகள் செய்த தொழில் அதிபர் வசிம் அதான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
