இன்று முதல்! கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நாசி வழி மருந்தும் சேர்ப்பு!!

கொரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து வழங்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நாசி வழி மருந்தும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறிப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகை ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது வரையில் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. குறிப்பாக அதன் பரிமான மாற்றத்தினை மாற்றிக்கொண்டே போகிறது.

இந்நிலையில் வைரஸ்ஸை தடுக்கும் விதத்தில் பூஸ்டர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். அதே சமயம் பாரத் பயோடெக் நிறுவனம் நாசி வழியாக தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்திருந்தது.

இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம் எனவில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக அந்நிறுவனம் கூறி இருந்தது. அந்த வகையில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நாசி வழி மருந்தும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.