ரொம்ப கவனம்.. இவங்க எல்லாம் மூக்கு வழி கொரோனா தடுப்பு செலுத்தக்கூடாது!

மூக்கு வழியாக கொரனோ தடுப்பு மருந்து செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் ஒரு சிலர் மூக்கு வழியே குரல் தடுப்பு மருந்து செலுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூக்கு வழியாக கொரனோ தடுப்பு மருந்தை செலுத்த மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் செலுத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூக்கின் உள் பக்கம் மற்றும் மூக்கின் மேல் கொரனோ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் இந்த மருந்து தயாரிக்க பட்டுள்ளதாகவும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் முன்னெச்சரிக்கை தவணையாக இந்த மருந்தைச் செலுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் மூக்கு வழியாக கொரனோ தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளும் பயனாளிகள் அதற்கான சான்றிதழை பெற வேண்டும் என்றும் அந்த சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்றும் மத்திய அரசுக்கு பயோடெக் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.