Connect with us

ஆயுசு முடிஞ்சிடுச்சு.. விண்வெளி ஆய்வு மையத்தை பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்கத் திட்டமிட்டுள்ள நாசா!

Untitled 24

News

ஆயுசு முடிஞ்சிடுச்சு.. விண்வெளி ஆய்வு மையத்தை பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்கத் திட்டமிட்டுள்ள நாசா!

ஆயுசு முடிஞ்சிடுச்சு.. விண்வெளி ஆய்வு மையத்தை பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்கத் திட்டமிட்டுள்ள நாசா!

உலகின் வளர்ந்தநாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்து வருகிறது.

இந்தியா வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்தாலும் விண்கலன்களை ஏவி உலக நாடுகளை தன்பால் ஈர்க்கத் தவறவில்லை.

இந்திய விண்வெளி ஆய்வுப் பணியின் தலைமைப் பணியகத்தை பெங்களூரில் 1969 ஆம் ஆண்டு உருவாக்கியது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் போன்ற நாடுகள் இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வடிவமைத்தன.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு உலகின் பல நாடுகளும் விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கு தங்கி ஆய்வுகளைச் செய்து வருகின்றது.

15 ஆண்டுகள் வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்வெளி மையம் காலப்போக்கில் தொடர்ந்து செயல்படும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது.

விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்பாடு இன்னும் 9 ஆண்டுகளில் நிறைவு பெறவுள்ள நிலையில் இதனை பூமிக்கு கொண்டு வருவது குறித்த ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

2031 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தை மக்கள் யாரும் வசிக்காத தெற்கு பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்கத் திட்டமிட்டுள்ளனராம்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top