இந்திய அரசியலமைப்பு தினம்: நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி உரை!!

இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில்  இந்திய அரசமைப்பின் சட்டங்கள் இயற்றப்பட்டது.இந்த இந்திய அரசியலமைப்பின் சட்டங்கள் நவம்பர் 27ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

மோடி

இந்த நவம்பர் 26ம் தேதியை தற்போது இந்திய அரசியலமைப்பு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.

அதன்படி இந்திய அரசியலமைப்பு  தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அரசியல் அமைப்பு மீதான தாக்குதலை சகித்துக்கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை  அரசியலமைப்பு தான் ஒருங்கிணைக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். நமது அரசியலமைப்பு என்பது சட்ட விதிகள் மட்டுமின்றி பல பாரம்பரியங்களை கொண்டது என்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சில அரசியல் கட்சிகள் ஜனநாயக மரபை மறந்து செயல்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.இறுதியில் சில கட்சிகளை கூறியது நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment