முதல் முறையாக வாக்களித்த நரிக்குறவர்கள்; தமிழக அரசுக்கு நன்றி!!

தூத்துக்குடியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வாக்குரிமை  பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக நரிக்குறவர் சமூக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே மூன்று தலைமுறைகளாக நரிக்குறவ மக்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ரேஷன் கார்டு ஆதார் கார்டு வாக்காளர் அட்டை போன்ற எதுவும் இல்லாமல் இருந்தது.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்த தேர்தலில் நரிக்குறவ மக்கள் முப்பத்தி ஆறு பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டதாக கூறினர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் 96 குடும்பங்களை சேர்ந்த 168 பேர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தனர். இதில் 40 நபர்களுக்கு நடப்பாண்டில் அடையாள அட்டை வழங்கப்பட்டு தங்களது வாக்குகளை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment