நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்!!

ஜெய்பீம் படத்திற்கு பின்பு தமிழகத்தில் அதிகமாக பழங்குடியினரின் உள்ள சமூகத்திற்கு தேவையான நல்ல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்து கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது குறித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் நரிக்குறவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி நரிக்குறவர்கள், குருவி காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை தேவை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அதில் இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இந்திய தலைமை பதிவாளர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று ஸ்டாலின் கூறினார். இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்றும் மூலம் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment