நன்றி மறத்தல் நன்றன்று – திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-8

cc584320469eeaaafd402c03391c8cf5

பாடல்..

கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ?
வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப்பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்! ……

பொருள்:

 நற்காலைப்பொழுது விடிந்துவிட்டது, கோழிகள் கூவுகின்றன. எங்கும் சிறுபறவைகள் ஒலிக்கின்றன. நாதசுரம் ஒலிக்கின்றது, எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. நாங்கள் அனைவரும் “தனக்குவமையில்லாத பேரொளியை, ஒப்பற்ற பேரருளை, மேலொன்றுமில்லாத மெய்ப்பொருளை, பரஞ்சோதியை பாடினோமே அது உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே வாழ்வாயாக! உன் உறக்கம்தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்.
அருட்பெருங்கடலாகிய எம்பெருமானுக்கு நீ அன்பு செய்யும் முறை இதுதானா? ஊழிக்காலத்தில் அனைத்து ஜீவராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்றத்தலைவனை, உமையொருப்பாகனை, ஏழைப்பங்காளனை பாடவேண்டாமா? எழுந்திரு கண்ணே!

விளக்கம்..

கஷ்டம் வரும்போது கடவுளை வணங்குவதும், கஷ்டம் நீங்கியபின் அவனை மறத்தல் மனித இயல்பு. அப்படி இருக்கக்கூடாதென விளக்குகிறது இப்பாடல்

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.