நானே வருவேன் படத்தின் டீசர் மற்றும் வில்லன் நடிகர் குறித்த மாஸ் அப்டேட்!

முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் நான்காவது முறையாகஉருவாகும் திரைப்படம் நானே வருவேன். வி க்ரியேஷன் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க மேயாத மான் மற்றும் பிகில் புகழ் இந்துஜா நாயகியாக நடிக்கிறார், எல்லி அவ்ர்ராம் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

197235 thumb 665 1

இப்படத்தை இயக்குவது மட்டுமின்றி, செல்வராகவன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ற நிலையில், அடுத்தாக படத்தின் டீசருக்கு மிகவும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் கூடுதல் தகவலாக படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடத்துள்ளார். ஹீரோ, வில்லன் இரண்டுமே இவர் தான்.

190437 thumb 665 1

நானே வருவேன் படம் பற்றி தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில், நானே வருவேன் கதையை செல்வராகவன் சொன்ன போது, கதை கேட்டு அசந்துட்டேன்.படத்தின் க்ளைமாக்சை இருக்கையில் நுனியில் அமர்ந்து பார்த்தேன்,உடனே தனுஷிற்கு கால் பண்ணி பேசினேன். தம்பி அசத்திட்டீங்க. உங்க நடிப்பிற்கு படம் நிச்சயம் ஹிட்டாகும் விருதும் உறுதியாக கிடைக்கும் என கூறியிருக்கிறார்.

682646

மீண்டும் ஸ்லிம்மாக மாறிய காஜல் அகர்வால்! மகனுடன் இருக்கும் பளிச் புகைப்படம்!

ஹீரோ ,வில்லன் என அப்படி ஒரு நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தி உள்ளார்.இந்த படத்திற்கு பிறகு தனுஷைன் லெவல் மேலும் உயரும் . நிறைய வித்தியாசமான ரோல்கள் வரும்.மேலும் தயாரிப்பாளர்கள் செல்வராகவனை நோக்கி செல்வார்கள். அதனால் தான் எனக்காக இன்னொரு படம் பண்ணிக் கொடுக்கனும்னு இப்பவே அவரை புக் செய்து விட்டேன் என்றும் கூறினார் .

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment