
தமிழகம்
அதிமுகவின் ‘நமது அம்மா நாளிதழ்’- ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கம்..!!
அனல் பறக்கும் அரசியல் களமாக மாறியுள்ளது அதிமுக கட்சி. அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை நிரூபிக்கும் படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். மேலும் அவர் கூறும் போது அதிமுக தொண்டர்கள் என் பக்கத்தில் இருக்கிறார்கள் என்றும் கூறினார். அதிமுகவின் இரும்பு பெண்மணியான ஜெயலலிதாவின் மனதில் என்னை யாராலும் நீக்க முடியாது என்றும் கூறினார்.
இந்த நிலையில் அதிமுக நாளிதழ் பத்திரிகையில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை நமது அம்மா நாளிதழின் நிறுவனர்களாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவர் இருந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய மாற்றமும் அதிமுக இடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக மாறியுள்ளது.
