‘நம்ம ஊரு திருவிழா’…..கட்டணம் எதுவும் இல்லை!!! அனைவரும் வரலாம்;

இன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கிண்டி கிங் மருத்துவமனையில் அடிக்கல் நாட்டுகிறார். அதோடு மட்டுமில்லாமல் இன்று தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சென்னை தீவுத் திடலில் இன்று நடைபெறும் நம்ம ஊரு திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா அதிகரிப்பு, உள்ளாட்சித் தேர்தல் பல காரணங்களால் தை மாதம் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவில்லை.

அதோடு மட்டுமில்லாமல் காணும் பொங்கல் அன்று தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .ஏனென்றால் ஜனவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.

அந்த ஞாயிற்றுக்கிழமை தான் நம் தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பொங்கலுக்கு பதிலாக இன்று திருவிழா நடத்தப்படுகிறது என்ற அரசு அறிவித்துள்ளது. நம்ம ஊரு திருவிழாவுக்கு கட்டணம் இல்லை என்றும் அனைவரும் வரலாம் என ஏற்கனவே அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment