சின்னத்திரையில் கம்பேக் கொடுத்த நமீதா…

‘ஹாய் மச்சான்ஸ்’ என்று தமிழ் மக்களை குறிப்பாக இளைஞர்களை அழைத்து பிரபலமானவர் கவர்ச்சி நடிகை நமீதா. குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தவர். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிப் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகம் ஆன திரைப்படம், ‘எங்கள் அண்ணா’. 2000 களின் நடுப்பகுதியில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

இதற்கிடையில் நமிதாவிற்கு 2010 களில் படவாய்ப்பு குறைந்தது. ஏற்கனவே நடித்திருந்த படங்களும் பெரிதாக பேசப்படவில்லை. இதற்கு அந்த நேரத்தில் நமீதா உடல் எடை அதிகரித்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதன் பின்பு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். எனினும் அவரது ரசிகர்கள் அவரை காண ஏங்கி கொண்டிருந்தனர்.

பின்பு கலைஞர் தொலைகாட்சியில் ஒளிபரப்பான 2010 முதல் 2015 வரை நடந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். அதன் பின்பு விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு 28 நாட்களில் வெளியே வந்து விட்டார். அதன் பிறகு சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத நமீதா, திருமண வாழ்க்கைக்கு தயாராகி ஒரு தொழிலதிபரை காதலித்து மணந்து கொண்டார். அதன் பின்பு இரட்டை குழந்தைகளுக்கு தாயான நமீதா குடும்பத்தை கவனித்து வந்தார். மேலும் அரசியலிலும் ஒரு பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார் நமீதா. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் மூன்று நடுவர்களுள் ஒருவராக நமீதா இணைந்திருக்கிறார். ஏற்கனவே, நடிகைகள் சினேகா, சங்கீதா மற்றும் பாபா மாஸ்டர் நடுவராக இருந்த நிலையில், பாபா மாஸ்டருக்கு பதிலாக நமீதா அந்நிகழ்ச்சியில் தொடர இருக்கிறார். முற்றிலும் புதிய தோற்றத்தில் ஸ்லிம்மாக நமிதாவை பார்த்ததில் அவரது ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...