கல்லூரி முதல்வரை மாற்றக்கோரி மாணவிகள் தர்ணா போராட்டம்.. பரபரப்பு தகவல்

கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டுமென மாணவிகள் அனைவரும் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரியின் முதல்வர் பால் கிரேஸ் என்பவரை மாற்ற வேண்டும் என மாணவிகள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டும் என இன்று திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி நுழைவுவாயில் முன்பு திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வணிகவியல் துறை மாணவிகளுக்கு இன்டெர்ன்ஷிப் கையெழுத்து போட முதல்வர் பால் கிரேஸ் மறுப்பதாகவும் பேராசிரியர் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவரும் அதில் எந்தவித ஈடுபாடும் என்று இருப்பதாகவும் குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து முதல்வர் பால் கிரேஸ் அவர்களை உடனடியாக மாற்ற வேண்டுமென்று கல்லூரி மாணவிகள் திடீர் என போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு பின்னணியில் ஒரு சில பேராசிரியர்களும் இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.