
தமிழகம்
நளினி விடுதலை: ஐகோர்ட் பரிசீலிக்கலாம் -தமிழக அரசு.!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் விடுதலை செய்யப்பட்டார். இதனை போல் மீதமுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நளினி விடுதலை குறித்து ஹை கோர்ட் பரிசீலிக்கலாம் என்று தற்போது தமிழக அரசு கோரியுள்ளது. அதன்படி தங்களை விடுவிக்கக் கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது. நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்ய ஆளுநரின் கையெழுத்து மிகவும் அவசியம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது, நளினி மற்றும் ரவிச்சந்திரனை விடுதலை செய்ய உயர் நீதிமன்றமே பரிசீலிக்கலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அது சட்டவிரோதம் என அறிவிக்கலாம் என்றும் நளினி கூறினார். மேலும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதால் மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப கூடாது என்றும் நளினி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
