Connect with us

நலம் தரும் தை அமாவாசை விரதம்

Spirituality

நலம் தரும் தை அமாவாசை விரதம்

மாதத்துக்கு ஒன்றென அமாவாசை வரும். சந்திரனும், சூரியனும் நேர்க்கோட்டில் இருப்பதே அமாவாசைக்கு காரணம். ஒருசில மாதத்தில் மட்டும் இரண்டு அமாவாசை வரும். அமாவாசை தினமானது நமது முன்னோர்களின் வழிப்பாட்டுக்கானது.

33db1fded9dc4c1957f7552fe3b18c01

அமாவாசை தினத்தில் அதிகாலையில் குளித்து, வீட்டை சுத்தம் செய்து அருகிலுள்ள நீர்நிலைக்கு சென்று, எள் கலந்த சாதத்திலான பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுக்கனும். பின்னர் வீட்டில் பலகாரம்லாம் செய்து படைக்கனும். எல்லா அமாவாசையின்போதும் விரதம் இருக்கமுடியாத சூழலில் இருக்கவுங்க, ஆடி, புரட்டாசி, தைமாதத்தில் வரும் அமாவாசையில் விரதமிருந்து வழிப்பட்டால் அந்த வருடம்முழுவதும் விரதமிருந்த பலன் கிடைக்குமென சாச்திரம் சொல்லுது. இந்த மூன்று அமாவாசைக்கும் மஹாளய அமாவாசைன்னு பேரு.   அதுமட்டுமில்லாம மாதந்தோறும் வீட்டிலிருந்தபடியே அமாவாசை விரதம் இருக்கவுங்க, ராமேஸ்வரம், கன்னியாக்குமரி, பவானி, திருச்செந்தூர் மாதிரியான புண்ணிய தலத்திலும், அருகிலிருக்கும் மூன்று ஆறுகள், கூடுமிடத்திலோ அல்லது நீத்தார் கடனுக்குன்னு புகழ்வாய்ந்த திருத்தலத்தில் ஆடி, புரட்டாசி தை அமாவாசையில்  தினத்தில் தர்ப்பணம் கொடுப்பாங்க. 

நமது முன்னோர்களின் திசையாக தெற்கு திசை இருக்கு. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது. அந்த மாதத்தில் பெருமாள், பித்ரு லோகம் செல்வார். அங்குள்ளவர்கள் அனைவரும், பெருமாளுக்கு பாதபூஜை செய்துவழிபடுவார்கள். இந்தப் பூஜையின்போது மகாவிஷ்ணு உடல்முழுவதும் எள் தானியம் நிறைந்து காட்சியளிப்பார். முன்னோர்களின் ஆராதனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் பெருமாள், அவர்களுக்கு பூஜை செய்ததற்கான பலன்களை வழங்குவார். இந்த பலன்களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர்களது உறவினர்களும் பெறுவார்கள். 

பின்னர் பித்ருக்களை 15 நாட்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினருக்கு பலன்கள் கொடுத்து வாருங்கள் என்று கூறி அனுப்பி வைப்பார். இதைத்தொடர்ந்து நமது முன்னோர்கள் அவர்கள் உறவினர் குடுபத்தைக்காண ஆசையுடனும் மகிழ்ச்சியுடனும் பூமியை நோக்கி புறப்படுவார்கள். மகாளய அமாவசையன்று அனைவரும் கூடுகின்றனர். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கி முனோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம். 

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர் களுக்கு முக்தி பேறு கிடைக்கும். மேலும் அன்றைய தினம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யவேண்டும். மறைந்த தாய், தந்தை படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும்.

நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்தபின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மன்மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டல் ஒருசில பித்ருக்கள் கோபத்துடன் சாபம் தந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். அமாவாசையன்று வாசலில் கோலமிடக்கூடாது. அசைவ உணவுகள், மது ஆகியவற்றை தவிர்த்தல் நலம். அன்னதானம், வஸ்திர தானம் முடிந்த தானங்களை செய்யலாம்.. ‘

இந்த வருடத்தின் அமாவாசையானது வரும் திங்கள் அன்று 4/2/2019 அன்று வருகிறது. எல்லா தோசத்தையும் போலவே பித்ரு தோசமும் கொடுமையானது. அந்த தோசத்திலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள அமாவாசை விரதமிருப்பது அவசியம். இந்த அமாவாசையானது 60 வருடத்துக்கொருமுறை வரும் அமாவாசை. இந்த நன்னாளில் முன்னோர்களை வழிப்பட்டு அவர்களது ஆசியை பெறுவோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top