Connect with us

‘விறகு அடுப்பில் சமையல்’…..? கேஸ் சிலிண்டர் விலையை கண்டித்து நூதன போராட்டம்!

stove gas

தமிழகம்

‘விறகு அடுப்பில் சமையல்’…..? கேஸ் சிலிண்டர் விலையை கண்டித்து நூதன போராட்டம்!

‘விறகு அடுப்பில் சமையல்’…..? கேஸ் சிலிண்டர் விலையை கண்டித்து நூதன போராட்டம்!

கடந்த இரண்டு வாரங்களாக நம் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதுவும் குறிப்பாக வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை திடீரென்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.

அதேவேளையில் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூபாய் 250 வரை விலை உயர்த்தப்பட்டது. இதனால் பல இடங்களில் இந்த விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.

அதுவும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அங்கு வசிக்கும் கிராம வாசிகள் காலி சிலிண்டர்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து அதற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்போது தேசிய கட்சி ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காணப்படுகிறது. அதன்படி பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி கேஸ் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top