அதிர்ச்சி! மதிய உணவில் பாம்பு.. 30 குழந்தைகளுக்கு வாந்தி!

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு கிடத்தால் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு மத்திய உணவில் பழங்கள், பருப்பு, சிக்கன் போன்றவைகள் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம் தகவல்!

இந்த சூழலில் பிர்பூம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் நேற்று வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. அபோது மதிய உணவில் பாம்பு இருப்பதை தெரியாமல் பள்ளி சிறுமிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனையறிந்த ஊழியர்கள் மாணவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது ஒரு குழந்தையை தவிர மற்ற சிறார்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் திபஞ்சன் ஜனா தெரிவித்து உள்ளார்.

பல பெண்களுடன் தொடர்பு! தட்டிக்கேட்ட மனைவி… திருச்சியில் பரபரப்பு!

மேலும், பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக அம்மாநில எதிர்க்கட்சி தரப்பினர் குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.