கோவிலுக்கு செல்லும் சாலையில் ஆணிகளை வீசிய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்!

இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் வழியில் அந்த அமைப்பை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் ஆணிகளை வீசியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் என்ற பகுதியில் பிரபலமான கோவில் ஒன்றில் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது திடீர் திடீர் என பல வாகனங்கள் பஞ்சர் ஆனது.

இதனை அடுத்து கோவில் நிர்வாகிகள் வாகனங்கள் பஞ்சரான பகுதிகளை ஆய்வு செய்த போது ஏராளமான ஆணிகளை கண்டெடுத்தனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ள நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் ஆணிகளை வீசிச் சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து நடந்த விசாரணையில் முகமது ஷபாஸ் (23), வாஹித் உசேன் (21) ஆகிய இரண்டு இளைஞர்கள் தான் ஆணிகளை வீசினார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தபோது இருவரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் என தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் சாலைகளை உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.