தமிழ் உள்பட பல மொழிகளில் டப்பிங் செய்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாகினி என்ற தொடரில் நடித்த நடிகரை திடீரென போலீஸார் கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல தொலைக்காட்சி தொடரான நாகினி தொடரின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் பேர்ல் வி புரி, இவர் 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை அடுத்து அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் நடிகர் பேர்ல் வி புரி கைது செய்யப்பட்டதோடு, அவருடன் சேர்ந்து அவருடைய நண்பர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்
கைதான ஐவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 17 வயது சிறுமிக்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்திஅ கூறி நடிகர் பேர்ல் வி புரி மற்றும் அவருடைய நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. நடிகர் பேர்ல் வி புரி பிக்பாஸ் 12 மற்றும் 13 சீசன்களீல் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.