நாகசைதன்யா – சமந்தா பிரிவு குறித்து மனம் திறந்த நாகார்ஜுனா !

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா, அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வசூல்ரீதியாகவும் விமர்சனங்கள் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது, முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ள சமந்தா திரைத்துறையின் கனவு கன்னியாக திகழ்கிறார். சமந்தா தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா தனது வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். அவர் தற்போது இந்த ஆண்டு அக்டோபரில் ‘சாகுந்தலம்’ வெளியாக உள்ளது, அதே நேரத்தில் ‘யசோதா’ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது, அதே நேரத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘குஷி’ தற்போது படப்பிடிப்பில் உள்ளது.

 

wedding

அதை தொடர்ந்து ‘அரேஞ்ச்மென்ட் ஆஃப் லவ்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வரும் நிலையில், ‘சிட்டாடல்’ உள்ளிட்ட பல ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு பட ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. அக்டோபர் 2021 இல் தனது நான்கு வருட திருமண வாழ்க்கையை சமந்தா முடித்துக்கொண்டார். அதன்பிறகு இந்த ஜோடி தங்கள் வாழ்க்கையில் முன்னேற, ஒருவருக்கொருவர் தனித்தனியாக வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறது.

தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த நட்சத்திர நடிகர்! அணியில் இணைந்தவர் யார் தெரியுமா?

சமீபத்தில் பிரம்மாஸ்திர படத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். சமந்தா உறவு முறிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் எனது முதல் சந்தோசம் என் மகன் நாக சைதன்யாவின் மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ளார். அவர் இப்ப மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் எதிர்பார்ப்பது அவ்வளவுதான். அது எனக்கு போதும். நாக சைதன்யாவுக்கு ஏற்பட்ட அனுபவம் துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment