காங்கிரஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்.. தேர்தல் நேரத்தில் பரபரப்பு..!

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திடீரென காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றுவிட்டதை அடுத்து பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாகலாந்து மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நாகலாந்து மாநிலத்தில் உள்ள அகுலுட்டோ என்ற சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று கொண்டார். இதனை அடுத்து பாஜக வேட்பாளர் கசெட்டோ கிமினி என்பவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏன் வாபஸ் பெற்றுக் கொண்டார் என்பதற்கான காரணம் என்னும் விளக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாகலாந்து மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் விலை போய்விட்டாரா என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

60 தொகுதிகள் கொண்ட நாகலாந்தில் 31 தொகுதிகள் பெரும் கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக தவிர மேலும் ஒரு உள்ளூர் கட்சி போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.