இந்த வாரம் வெளியேறுவது இந்த ஐவரில் ஒருவர்: கமல்ஹாசன் அறிவிப்பு

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு 15 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் 10 பேர் காப்பாற்றப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அது போக மீதி உள்ள நாடியா, அபிஷேக், மதுமிதா, வருண் மற்றும் சின்ன பொண்ணு ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேற போகிறார் என்றும் அவர்களில் யார் என்பதை நாளை பார்ப்போம் என்றும் கமல்ஹாசன் நேற்று அறிவித்ததோடு நேற்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான ப்ரோமோ வீடியோவில், ‘ஐவரில் ஒருவர் வெளியேறுகிறார். அவர் யார் என்பதை அறிவிப்பதில் எனக்கும் திகிலாக இருக்கிறது என்று கூறி வெளியே போகும் போட்டியாளர் யார் என்பதை அறிவிக்க கமல்ஹாசன் தயாராகும்போது இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.

ஆனால் ஏற்கனவே கசிந்து தகவலின்படி இன்று நாடியாசாங் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment