நடராஜர் தோற்றத்தின் அர்த்தம் தெரியுமா?!

4daefcafec97c549e640f90797c33c28
OLYMPUS DIGITAL CAMERA

ஒவ்வொரு இறை உருவத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அதன்படி சிவபெருமானின் தோற்றமான நடராஜர் திருவுருவத்தின் அர்த்தத்தினை தெரிஞ்சுக்கலாமா?!

நடராஜர் தலையில் இருக்கும் கங்கை, ஆண்டவனை ஆராதித்தால் அறியாமை நீங்கும், சிவன் கையிலிருக்கும் டமருகம்ன்ற உடுக்கை, ஓம் என்ற ஒலியே உலகம் உருவாக காரணம். சிவன் உடம்பிலிருக்கும் அரவம், முக்காலமும் காலகாலனிடம் அடக்கம், உயர்த்திய கால்கள் அனைத்து உயிர்களிடத்திலும் இறைவன் இருப்பது. அபயவரத முத்திரை கரங்கள், எல்லாவற்றிற்கும் துணையாய் நானிருக்கிறேன். பயம் கொள்ளாதே!. பத்ம பீடம், இறைவனை சரணடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. திருவாசி, மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பது தெய்வத்தின் செயலே. பிறைநிலா, வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம், வளர்தல், தேய்தல் இயற்கையே! சிவன் கையிலிருக்கும் அக்னி, தன் படைப்பே ஆனாலும் தீயவைகளை அழிப்பதும் கடவுளின் வேலை, சிவனின் திருவடியில் இருக்கும் அபஸ்மரா என்னும் முயலகன், ஆணவம் கொள்ளக்கூடாது. இவை அனைத்தையுமே நடராஜர் தோற்றம் நமக்கு உணர்த்துது.

 

80d18854c1a2c6e8dbcd995decad95d4

ஒரு நடராஜர் சிலை விதிப்படி உருவாக்கப்பட்டுள்ளதா என தெரிந்துக்கொள்ள, கொஞ்சம் நீரினை நடராஜர் சிலையின் தலையில் ஊற்றுவாங்க. அந்த நீர் வழிந்து இடதுகையில் இறங்கி, இடதுகையிலிருந்து வழிந்து இடது காலில்மீது விழுந்து பின்னர் கீழ விழவேண்டும். அப்படி விழுந்தால்தான் அது விதிப்படி உருவாக்கப்பட்ட சிலாரூபம்ன்னு தெரிஞ்சுக்கலாம்.,

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.