தெளிந்த அறிவும், ஞானமும் கிடைக்க இன்று இந்தத் தேவியை வணங்குங்கள்

நவராத்திரி முதல் 3 நாள்கள் துர்க்கைக்கு உரியது. நமக்கு வீரத்தைத் தரக்கூடிய கொற்றவையாக விளங்கக்கூடிய தேவியை நாம் ராஜ ராஜேஸ்வரி என்ற பெயரில் வழிபட்டு வருகிறோம்.

நவராத்திரி 2ம் நாளான இன்று (27.09.2022) நவதுர்க்கையின் பெயர் பிரம்மச்சாரிணி. முதல்நாளில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்தார் பார்வதி தேவி. 2ம் நாளில் அதற்கு அடுத்த கட்டமாக பிரம்மச்சாரிணி என்ற நிலையை அடைகிறாள்.

ஒரு மனிதனோட வாழ்க்கையை நான்கு பாகமாகப் பிரிக்கலாம். அதில் கால் பங்கு பிரம்மச்சாரியம். அரை பங்கு கிரஹஸ்தம். முக்கால் பங்கு வானபிரஸ்தம். முழுபங்கு சன்னியாசம்.

முதல் பங்கு மனிதனோட ஆயுளில் கால்வாசி பாகமாக முறையாக பிரம்மச்சாரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். இந்தக் காலகட்டங்களில் தான் கல்வியில் சிறந்து விளங்கி ஞானத்திற்கான தேடுதலை அடைந்து விட வேண்டும். இந்த பிரம்மச்சரியத்தை விளக்கும் விதமாகத் தான் அம்பாள் பிரம்மச்சாரிணியாக அவதாரம் எடுக்கிறாள்.

Kumari Amman
Kumari Amman

படிப்படியாக நாம் எப்படி உயர்கிறோம் என துர்க்கை தனது ரூபத்தைக் காட்டுவது தான் நவராத்திரி. வடநாட்டில் தான் இந்த பிரம்மச்சாரிணி என்ற பெயர் உள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் அம்மன் கன்னியாக அவதரித்து இருக்கிறாள். அங்கு அவரது ரூபம் பிரம்மச்சாரிணி.

ரொம்ப எளிமை. கையில் கமண்டலம், தண்டம் கோலத்தில் காட்சி தருவாள். கன்னியாகுமரியில் அம்மன் ஜெபமாலையுடன், மூக்குத்தி ஒளியில் பகவதி அம்மனாகக் காட்சி அளிக்கிறாள். இந்த அம்மனுக்கு வாகனம் கிடையாது. இந்த அம்பிகையின் பெயர் ராஜராஜேஸ்வரி.

RajaRajeswari
RajaRajeswari

நவதுர்க்கையில் பிரம்மச்சாரிணி அவதாரம். முல்லை மலர்களால் பூஜை செய்யலாம். புளிசாதம், மாம்பழம், வேர்க்கடலை சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக வைக்கலாம். கல்யாணி ராகத்தில் பாட்டு பாடலாம். மஞ்சள் நிற உடைகளை அணிந்து வழிபாடு செய்யலாம்.

இந்த அம்பிகையை வழிபாடு செய்வதால் தெளிந்த அறிவும், ஞானமும் கிடைக்கும். கல்வியால் கிடைப்பது தான் அறிவு. படிப்பதால் மட்டும் வரக்கூடியது அறிவு. அவர்கள் அறிவாளிகள். ஞானம் என்பது இறைவனால் தரக்கூடியது. இதற்கு வயது வரம்பு கிடையாது.

இந்தத் தேவியை வணங்கி வழிபடும்போது நாம் கல்வியில் சிறந்து அறிவுடன் விளங்கி பிரம்மச்சரியத்தை முறையாகக் கடைபிடிப்பதால் ஞானத்தைப் பெறலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews