புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி என்ற இடத்தில் துப்பாக்கி சுடும் தளம் உள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீஸார் கடந்த டிச.29, 30-ம் தேதிகளில் இப்பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த துப்பாக்கி குண்டு தவறுதலாக சென்று அங்கிருந்து 2 கிமீ தொலைவில் வீட்டில் இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் பாய்ந்தது.
அந்த சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்து நிவாரண தொகை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில் பசுமலைப்பட்டி பயிற்சி தளம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.