‘நானே வருவேன்’ 15ஆம் தேதி வெளியாகும் டீசர்-வெய்டிங்கில் வெளியாகும் ரசிகர்கள்!

தற்போது நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு ரசிகர்கள் வந்தாலும் உலக சினிமா அளவிற்கு உயர்ந்துள்ளவர்தான் நடிகர் தனுஷ். ஏனென்றால் இவர் நடிப்பில் ஹாலிவுட் திரைப்படமான க்ரேமேன் படம் வெளியாகி அவருக்கு பெரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.

அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டு உள்ளது .இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

அடுத்தடுத்த பட அப்டேட்களை தனுஷ் தரப்பில் இருந்து வெளியாகி கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. அதன் ஒரு கட்டமாக நானே வருவேன் என்ற திரைப்படத்தின் டீசர் இந்த மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் தனுஷின் சகோதரரான செல்வராகவன் முதல் முறையாக தனுஷோடு சேர்ந்து நடித்துள்ளார்.

ஏற்கனவே செல்வராகவன் சாணிக் காகிதம் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படத்தில் நடித்து தனது நடிப்பின் திறமையும் மக்களுக்கு வெளிப்படுத்தியதால் படத்தின் டீசருக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.