நாய் சேகர் படத்தின் விமர்சனம்- நாயாக மாறும் ஹீரோ சதீஷ்

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு சிறிய இடைவேளைக்கு பின் தயாரித்திருக்கும் படம் நாய் சேகர். இப்படத்தில் சதீஷ் , குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி நாயகியாக நடித்துள்ளார்.

சதீஷ் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோவாக  முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

லேப்ரடார் வகை நாய்தான் படத்தின் ஹீரோ போல கதை அமைக்கப்பட்டு உள்ளது. மனிதனாக மாறும் நாய் , நாயாக மாறும் மனிதன் இந்த அடிப்படையில் ஒரு கதை யோசித்து அப்படி மாறினால் என்ன ஆகும் என சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது.

நடுவில் கொஞ்சம் ஜாதி பிரச்சினையை கலந்து அதுவும் அதிக திகட்டல் இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் எதிர்பார்த்த அளவு நகைச்சுவையும் நன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான காமெடி படமாக இல்லாமல் வித்தியாசமான காமெடி படமாக இது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment